fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்ட தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 14:28

தோட்ட தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

தேயிலை தொழிற்துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை தொடர்பிலிலும் இக்குழு பிரதானமாக அவதானம் செலுத்தவுள்ளது.

தேயிலை துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமமயில் இடம்பெற்றது. தேயிலை கைத்தொழில் துறையில் ஏற்பட்டுள்ள குறுகியகால மற்றும் நீண்டகால பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை முன்வைப்பதற்காகவே ஜனாதிபதியினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிப்தி ஊழியர் செயலணியின் தலைவர் எச்.எம்.பி. ஹிட்டிசேக்கர, தோட்;ட கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலளார் ஆர்.பி.ஆர் ராஜபக்ஷ, திரைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க, தேயிலை சபையின் தலைவர் டப்ளியூ.என்.பி. விஜயவர்தன, தொழிலாளர்கள் ஆணையாளர் நாயகம் கே.விமலவீர, சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், பெருந்தோட்ட தொழிற்சங்கம் இலங்கை தேயிலை தொழ்ற்சாலை உரிமையாளர் சங்கம், இலங்கை தரகர்களின் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியோரும் இக்குழுவில் உளளடக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் இக்குழு ஜனாதிபதிக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 14:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க