fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த குழந்தை-அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 18:29

தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த குழந்தை-அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அண்மையில் வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியைச்சேர்ந்த ஒரு மாத குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி மரணித்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் பிரேத பரிசோதனையின் போது குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா சாம்பல் தோட்டத்தில் ஒரு மாத குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்தது.பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்ற பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

குறித்த வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துள்ளனர்.வைத்தியசாலை வைத்தியர்களின் அறிக்கையிலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு குழந்தை உயிரிழந்த பின் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டமை குழந்தையின் உறவினர்கள் மத்தியில் தாங்கொணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் உடற்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் குழந்தை பிறந்த பின்னர் வைத்தியர்கள் சரியான முறையில் வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளாமையே இதற்கான காரணம் என உயிரிழந்த குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 18:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க