fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாகந்துரே மதுஷ் தொடர்பான விசாரணைகள் துரித கதியில்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 12:51

மாகந்துரே மதுஷ் தொடர்பான விசாரணைகள் துரித கதியில்

பாதாள உலக தலைவர் மாகந்துரே மதூசுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறப்படும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. டுபாயில் கைதுசெய்யப்பட்ட மதூஸ் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த விரிவான உத்தியோபூர்வ அறிக்கை அடுத்தவாரம் கிடைக்கப்பெறுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாகந்துரே மதூசுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் உள்ளிட்டோர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டத்தை மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபியிலுள்ள தூதரக காரியாலயம், டுபாயிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீதிமன்றத்தினூடாக இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க