fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரானின் ஏவுகணை திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது : ஈரான் ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 11:48

ஈரானின் ஏவுகணை திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது : ஈரான் ஜனாதிபதி

ஈரானின் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென ஜனாதிபதி ஹசன் ரௌஹாணி தெரிவித்துள்ளார். பகைமை பாராட்டும் நாடுகளின் எதிர்ப்புகளுக்கு அடிபணியாமல் ஈரான் தொடர்ந்தும் அதன் இராணுவ வலிமையை விரிவுபடுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரானிய புரட்சியின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ஹசன் ரௌஹாணி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் ஈரான் மீது விதித்த தடைக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 11:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க