மெக்சிக்கோவில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கடத்தி கொலைசெய்யப்பட்டுள்ளனர். மெக்சிக்கோவின் மிச்சோகன் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 5 பொலிஸார் கடந்த 4ம் திகதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டனர். இதனையடுத்து பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காரொன்றுக்குள் பொலிஸ் அதிகாரிகள் ஐவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்சிக்கோவில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கடத்தி கொலை
படிக்க 0 நிமிடங்கள்