fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலய விளையாட்டரங்கு மாணவர்களிடம் ஒப்படைப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 10:04

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலய விளையாட்டரங்கு மாணவர்களிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலய விளையாட்டரங்கை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சர் மனோகணேசன் மாணவர்களிடம் கையளித்தார்.

இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.
அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாட்டு, இந்துசமய விவகார அமைச்சின் 20 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோவில் போரதீவு மகா வித்தியாலயம், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கா.கோபிநாத், அமைச்சின் மேலதிக செயலாளர் இரா. ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2019 10:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க