fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு சமரசமாக தீர்ந்துவிடும் அறிகுறி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2019 13:23

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு சமரசமாக தீர்ந்துவிடும் அறிகுறி

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்ள இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இவ்வழக்கை குறுகிய முறையில் நிறைவு செய்து கொள்வதற்கு இருதரப்பினரும் இணக்கம் தெரிவிப்பதாக இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலி ஆவணங்களை ஊடகங்களுக்கு முன்வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு செயற்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கோட்டை மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்குற்றச்சாட்டை நீக்கி கொள்வது தொடர்பாக பிரதிவாதிகள் சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக பிரதி சொலிஷிட்டர் ஜெனரால் திலீப்ப பீரிஸ் இதன்போது தெரிவித்தார். வழக்கை சமரசமாக நிறைவு செய்து கொள்வதற்கு இவ்வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மன்னிப்பை வழங்கி இவ்வழக்கை நிறைவு செய்து கொள்ளப்படுமா? அல்லது வேறு முறையொன்றின் மூலம் இது இடம்பெறுமா? என்பதை அறிந்து கொள்வதற்கு தமது வாடிக்கையாளர் எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். வழக்கின் இரண்டாவது சாட்சியாளரான ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு வழக்கின் தற்போதய நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதி சொலிசிட்டர ஜெனரால் இதன்போது தெரிவித்தார். இவ்வழக்கை குறுகிய முறையில் மன்னிப்பை பெற்று நிறைவு செய்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்த திஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த சமரச முடிவு குறித்த முன்னேற்றங்களை அறிந்து கொள்வதற்கு வழக்கு மார்ச் மாதம் 5 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2019 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க