fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டாவின் மனு நிராகரிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 12:49

கோட்டாவின் மனு நிராகரிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிர்மாணிப்பு குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாமென்ற கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் குறித்த ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

கடந்த அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 12:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க