fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டாயவின் ஆட்சேபனை நிராகரிப்பு : வழக்கை முன்னெடுத்து செல்ல நீதிமன்றம் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 14:34

கோட்டாயவின் ஆட்சேபனை நிராகரிப்பு : வழக்கை முன்னெடுத்து செல்ல நீதிமன்றம் தீர்மானம்

டீ.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் அமைத்ததில் 39.9 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை விசேட மேல் நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை நிர்ணயித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஹர்ஷான் டி சில்வா, கேமிந்த ஆட்டிகல, ஏப்ரஹான் கலபதி, பத்ரா உதுலாவதி, மஹிந்த சாகல மற்றும் மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோர் இவ்வழக்கின் பிரதிவாதிகள் ஆவர். நம்பிக்கை மோசடி, சூழ்ச்சி, சூழ்ச்சிக்கு துணை போனமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவ்வழக்கு தொடக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகளின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இவர்கள் குற்றவாளிகளா சுற்றவாளிகளா என்பதற்கான பதிலை பெற்றுகொள்ள நிரந்தர நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இவ்வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அனைத்து பிரதி மனுதாரர்களின் வாக்குமூலத்தை ஒரே நேரத்தில் பெற்று கொள்ள வேண்டுமென்பதால் இவ்வழக்கு எதிர்வரும் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குறித்த வழக்கினை மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் இல்லையென பிரதிவாதிகள் இரண்டு ஆட்சேபணைகளை தாக்கல் செய்திருந்தனர். குறித்த மூவர் அடங்கிய மேல் நீதிமன்றம், நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே சட்டமா அதிபர் வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் நீதிபதி சம்பத் அபேகோன் விசாரணைகளின் போது தெரிவித்தார். அதனால் இந்த நீதிமன்றத்தை சவாலுக்குடப்டுத்த முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதேவேளை இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபரான கோட்டாபய ராஜபக்ஷ பத்து நிமிடங்கள் தாமதமாக நீதிமன்றத்திற்கு வருகை தந்தமையினால் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மூவரடங்கிய நீதிமன்றம் எச்சரித்தது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 14:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க