fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 14:26

எவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்

எவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சேனை புழுக்களின் தாக்கத்தினால் இலங்கையில் சோள பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான விவசாயிகள் சோளச் செய்கையை கைவிட ஆரம்பித்தனர். சேனை புழுவின் தாக்கம் ஏற்பட்டதன் பின்னர் கடந்த போகத்தில் 82 ஹெக்டயரில் மேற்கொள்ளப்பட்ட சோளச் செய்கையில் ஐந்து வீதத்திற்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படைப்புழு ஒழிப்பு தொடர்பில் கண்ணொருவ விவசாய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. விவசாய திணைக்களத்தின் ஆலோசனைக்கு பிரகாரம் உரிய காலப்பகுதியில் சோளச் செய்கையை மேற்கொள்வதால் பாதிப்புக்களை குறைக்கலாம் என விவசாய திணைக்களத்தின் திட்டம் மற்றும் பயிற்சிகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் கே.பீ குணரட்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2019 14:26

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33