fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருள் கடத்தல் காரரான அந்தரேவத்தே ச்சாமர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 18:58

போதைப்பொருள் கடத்தல் காரரான அந்தரேவத்தே ச்சாமர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

போதைப்பொருள் கடத்தல் காரரான அந்தரேவத்தே ச்சாமர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை மட்டக்குழி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து கைக் குண்;டொன்றும் 5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. விளக்கமறியலிலுள்ள தெமட்டகொட ச்சமிந்தவுடன் இணைந்து குறித்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அங்கொட லொக்கா, மாகந்துரே மதூஸ் ஆகியோரின் உதவியாளராகவும் குறித்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் அந்தரேவத்தே ச்சாமர தொடர்புபட்டவர் என தெரியவந்துள்ளது. தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று அவரை கைதுசெய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 18:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க