நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து
Related Articles
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அத்துடன் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.