fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:18

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக விமான நிலைய சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சார்ஜா நகரிலிருந்து வருகைத்தந்த விமானத்தினூடமாக இன்று அதிகாலை சந்தேக நபர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களின் பயணப்பையிலிருந்து 31 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் சிகரெட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2019 15:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க