பெலியத்தை, பாலடுவ மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மாத்தறை நகரில் வைத்து உள்நாட்டு துப்பாக்கி இரண்டும் அவற்றின் பாகங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.