இஸ்ரேலிடமிருந்து ஏவுகணை கொள்வனவு செய்ய அமெரிக்க தீர்மானம்
Related Articles
இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் பயன்படுத்தும் அயன் டோம் (ஐசழn னுழஅந) ஏவுகணையை கொள்வனவு செய்ய அமெரிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் குறித்த ஏவுகணைகளை இஸ்ரேலில் வைத்து பரிசோதனை செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ராடர் மற்றும் இடைமறித்தல் ஏவுகணைகளாக அவை பயன்படுத்தப்படவுள்ளதுடன் இது எதிர்காலத்தில் தமது நாட்டிற்கு வரவுள்ள அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுப்பதற்கு உதவுமென அமெரிக்க இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஏவுகணைகள் பயன்படவுள்ளதடன் அது வெற்றியளிக்கும் பட்சத்தில் இராணுவத்தின் நீண்டகால தேவை கட்டமைப்பில் அயன் டோம் ஏவுகணைகள் உள்ளடக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏவுகணைகளை அமெரிக்கா கொள்வனவு செய்வது தமது நாட்டிற்கு கிடைத்த வெற்றியென இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.