fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் விசேட அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 13:19

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் விசேட அறிவிப்பு

அரசியல் யாப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார். இதேநேரம் இன்று பாராளுமன்ற மின்தூக்கியில் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் அது உரிய முறையில் செயற்படாமையினால் சில நிமிடங்கள் சிக்கிய நிலையில் திண்டாடியதாகவும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அரசியல் அமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் யாப்பு பேரவையினால் வேட்பாளர் பட்டியில் அங்கீகரிக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியல் யாப்பு பேரவை தொடர்பில் நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றியமை தொடர்பில் பதில் அளித்த சபாநாயகர் அரசியல் யாப்பு பேரவை உரிய முறையில் செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய பா.உ மஹிந்த அமரவீர ஜனாதிபதியின் உரைக்கு எதிராக கருத்து கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அரசியல் பேரவை தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்த இணக்கம் காணப்பட்டதாகவும் அதனால் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் கிரிஎல்ல கூறினார். இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை ஒன்று இல்லாமல் விமர்சனங்களை முன்வைக்க முடியாது என பா.உ தினேஷ் குணவர்தன கூறினார். அரசியல் யாப்பு பேரவை தொடர்பில் இன்று வாதம் நடத்தப்பட வேண்மென எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்ட நிலையில் பாராளுமன்றத்தில் சூடான வாத பிரதிவாதிகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றை சபாநாயர் கூட்டினார். மீண்டும் பாராளுமன்றம் முற்பகல் 11.30கு கூடியது. இதன்போது உரையாற்றிய பா.உ வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்த போது மின்தூக்கி செயல்படவில்லையென்றும் இதனால் சுமார் 25 நிமிடம் மின்தூக்கியில் தாங்கள் சிக்கியிருந்ததாகவும் இதனை உடனடியாக சரிசெய்யுமாறும் வாசுதேவ நாணயக்கார கேட்டுக்கொண்டார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க