fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தண்டனைக்காலம் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 13:12

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தண்டனைக்காலம் நீடிப்பு

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தண்டனைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 12 வருடங்களும் 11 மாதங்களுமாக அவரது தண்டனைக்காலத்தை நீடித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவிற்கு ஏற்கனவே 12 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டதால் அவரது தண்டனைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை குறித்த தண்டனைக்கால நீடிப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க