fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்துவர டுபாய் அரசுடன் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 12:35

மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்துவர டுபாய் அரசுடன் பேச்சுவார்த்தை

மகாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்து வர டுபாய் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த மகாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ருவண் விஜயவர்த்தன குறிப்பிட்டார். டுபாய் பொலிசாரே சந்தேக நபர்களை கைதுசெய்தனர். எனினும் ராஜதந்திர ரீதியாக கைதுதொடர்பில் இதுவரை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை. டுபாய் அரசாங்கத்துடன் கலந்துரையாடி சந்தேன நபர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியுமென்ற நம்பிக்கை இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ருவண் விஜயவர்த்தன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ருவண் விஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2019 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க