fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘விஸ்வாசம்‘ கன்னடத்தில்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 08:45

‘விஸ்வாசம்‘ கன்னடத்தில்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவானது ‘விஸ்வாசம்‘ திரைப்படம். அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2019 08:45

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க