fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட முக்கிய பாதாள உலக தலைவர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2019 18:39

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட முக்கிய பாதாள உலக தலைவர்கள் கைது

மாகந்தரே மதுஷ் எனும் பாதாள உலக தலைவர் உள்ளிட்ட 20 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கேன் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு பரவலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிக்காட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இலங்கையின் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் அண்மையில் முறியடிக்கப்பட்டது. அத்துடன் இன்றைய தினம் 100 கிலோவுக்கும் கூடுதலான ஹெரோயின் போதை பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பகுதியில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் கடத்தல்களை முறியடிக்கும் அதிகாரிகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். போதை பொருள் முற்றுகைகளை மேற்கொள்ளும் பொலிசாரை பாராட்டும் வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தினை சர்வதேச உறவுகள் ஊடாகவும் மேலும் விரிவுப்படுத்த வெளிநாடுகளில் உள்ள போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் வேலைத்திட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளனர். இதற்கு பல நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றன. அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அந்நாடுகளுடன் கட்டியெழுப்பியுள்ள உறவுகள் காரணமாகவே இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடிந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ள மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட பாதாள உலக கோஷ்டியினர் டுபாயில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொக்கேன் போதை பொருளும் மீட்கப்பட்டது. இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகையின் போது மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட மேலும் பல முக்கிய பாதாள உலக தலைவர்கள் நான்கு பேர் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவரும் அடங்குகின்றார். ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாகந்துரே மதுஷ் என்பவர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை வழிநடத்தி பல படுகொலைகளை புரிந்துள்ளார். போதை பொருள் கடத்தல்காரர்களுள் முக்கிய உறுப்பினராகவும் இவர் கருதப்படுகின்றார். அவரை கைது செய்ய பொலிசாரும் புலனாய்வு பிரிவினரும் பல மாதங்களாக பாரிய நடவடிக்கைளை முன்னெடுத்து வந்தனர். இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள்  மதுஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2019 18:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க