fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

71வது தேசிய  தினத்திற்கு உலக தலைவர்கள் வாழ்த்து

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2019 14:55

71வது தேசிய  தினத்திற்கு உலக தலைவர்கள் வாழ்த்து

இலங்கையின் 71வது தேசிய  தினத்திற்கு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அதிஷ்டம், மகிழ்ச்சி, சௌபாக்கியம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிவர் புட்டினும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு வாழ்த்து செய்தியென்றை அனுப்பியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவு தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஜனாதிபதி புட்டின் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதிக்கு வாழ்த்துச்செய்தியொன்றை அனுப்பியுள்ளார். இலங்கையர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் மக்கள் நல வேலைத்திட்டங்களை வரவேற்பதாகவும் இந்திய ஜனாதிபதி வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2019 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க