fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்முறை அதிகளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு பயணம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2019 15:44

இம்முறை அதிகளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு பயணம்

தொடர் விடுமுறையினால் அதிகளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளனர். சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் சிவனொளிபாதமலைக்கு பயணித்துள்ளனர். யாத்திரிகர்களின் நலன்கருதி தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நல்லதண்ணியிலிருந்து மவுசாகலை வரையான 5 கிலோமீற்றர் தூரத்திற்கு பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மலையின் உச்சியை சென்றடையாது யாத்திரிகர்கள் மீள திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது. சிவனொளிபாதமலையை அண்மித்த பகுதிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் தேவையான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2019 15:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo