Life+News The Official News Portal of Independent Television Network Ltd

71 வது தேசிய தினம் : இன்று முதல் ஒரு வாரத்திற்கு தேசிய கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 16:11

71 வது தேசிய தினம் : இன்று முதல் ஒரு வாரத்திற்கு தேசிய கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் வேண்டுகோள்

71 வது தேசிய தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடிய பறக்கவிடுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கமைய 71 வது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் எதிர்வரும் 4 ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நடவடிக்கைகளினால் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கை இடம்பெறுவதால் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவித்தல்விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2019 16:11
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க