புது வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

புது வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை 0

🕔16:40, 1.ஜன 2019

இந்த வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறும்.கடந்த மாதம் 20ஆம் திகதி புதிய அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் குறுகிய நேர அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது.

Read Full Article
அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோர் பிணையில் விடுதலை

அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோர் பிணையில் விடுதலை 0

🕔16:00, 1.ஜன 2019

2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பிலேயெ இவர்கள்

Read Full Article
நிதி மற்றும் ஊடகத் துறை  அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம் 0

🕔15:52, 1.ஜன 2019

நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதிஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர்ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read Full Article
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி 0

🕔14:47, 1.ஜன 2019

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி புத்தாண்டு பிறப்பினை அண்மித்த காலமானது நாம் கடந்து வந்த காலத்தில் எமது வாழ்க்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றிதோல்விகளை பற்றியும் நிறைகுறைகளைப் பற்றியும் மீட்டிப்பார்ப்பதற்கான சிறந்த தருணமென ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துசெய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் கடந்த காலத்தை மீண்டும் மீட்டிப்பார்ப்பதன் மூலமே மனிதன் தனது பாதையில் இன்னல்கள் அற்ற வளமான

Read Full Article
யேமனில் மோதல்களினால் அதிகளவான பொதுமக்களுக்கு பாதிப்பு

யேமனில் மோதல்களினால் அதிகளவான பொதுமக்களுக்கு பாதிப்பு 0

🕔11:29, 1.ஜன 2019

யேமனில் இடம்பெறும் மோதல்களினால் அதிகளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஒருசில பகுதிகளில் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். நிவாரண நடவடிக்கைகளுக்கென உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினரிடம் சர்வதேச உணவு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச நாடுகளில் விசேட நிகழ்வுகள்

புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச நாடுகளில் விசேட நிகழ்வுகள் 0

🕔11:28, 1.ஜன 2019

பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச நாடுகளில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரம்மாண்டமான முறையில் வானவேடிக்கை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இம்முறை ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டுள்ளது.

Read Full Article
முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 0

🕔11:26, 1.ஜன 2019

அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னர் பாடசாலை வளாகங்களை நுளம்புகளற்ற வலயமாக மாற்ற சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

Read Full Article
அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி 0

🕔11:21, 1.ஜன 2019

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே சேவையில் உள்ளனர். குறித்த பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான நேர்முக பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய நேர்முக பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அரச

Read Full Article
நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணம்

நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணம் 0

🕔09:59, 1.ஜன 2019

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் நண்பகல் 2 மணியளவில் கிளிநொச்சியை சென்றடையவுள்ளது. இதேவேளை ரயில்வே ஊழியர்களால் சேகரிக்கப்பட்ட உதவிப்பொருட்களுடன் காங்கேசன்துறையிலிருந்து ரயிலொன்று கிளிநொச்சி நோக்கி பயணிக்கவுள்ளது.

Read Full Article
குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலில்

குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலில் 0

🕔09:41, 1.ஜன 2019

குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நூற்றுக்கு 3 வீதத்தால் கட்டண குறைப்பை மேற்கொள்ள இணக்கம் எட்டப்பட்டது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள

Read Full Article

Default