படையினரின் வசமிருந்த மேலும் 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

படையினரின் வசமிருந்த மேலும் 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு 0

🕔13:08, 30.ஜன 2019

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் படையினரின் வசமிருந்த 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 4 ஏக்கருக்கும் அதிக காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக வன்னி மாவட்ட பாதுகாப்புபடை தலைமையகம் தெரிவித்துள்ளது. பயிர்ச்செய்கைக்கென பயன்படுத்தப்பட்ட காணிகளும் அதில் உள்ளடங்குவதாக வன்னி மாவட்ட பாதுகாப்புபடை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
`தேவ்’ காதலர் தினத்தில் வெளியீடு

`தேவ்’ காதலர் தினத்தில் வெளியீடு 0

🕔12:57, 30.ஜன 2019

கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்’. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் திகதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

Read Full Article
குழந்தை வளர்ப்பை தவிர்த்து செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மக்கள்

குழந்தை வளர்ப்பை தவிர்த்து செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மக்கள் 0

🕔12:40, 30.ஜன 2019

செல்லப்பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை தென்கொரியாவில் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், பலர் தங்கள் செல்லப்பிராணிகளையே குழந்தையாக நினைத்து வளர்க்கத் தொடங்கி உள்ளனர். தென் கொரியாவில் செல்லப்பிராணிகள் தொழில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் தென் கொரியாவின்

Read Full Article
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை சட்டவிரோதமானது : ரஷ்யா

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை சட்டவிரோதமானது : ரஷ்யா 0

🕔12:19, 30.ஜன 2019

வெனிசுலா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை சட்டவிரோதமானதென ரஷ்யா தெரிவித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கலொஸ் மடுரோவின் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
20 – 20 உலக கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியீடு

20 – 20 உலக கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியீடு 0

🕔12:13, 30.ஜன 2019

20 – 20 உலக கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 7 ஆவது 20 – 20 உலக கிண்ண போட்டி அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில்  ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களிலுள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளன.

Read Full Article
அமெரிக்காவுடன் சிறந்த மற்றும் அமைதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் : வடகொரியா

அமெரிக்காவுடன் சிறந்த மற்றும் அமைதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் : வடகொரியா 0

🕔11:40, 30.ஜன 2019

அமெரிக்காவுடன் சிறந்த மற்றும் அமைதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்குமிடையில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற சந்திப்புக்கமைய புதிய இருதரப்பு உறவை மேம்படுத்த வடகொரியா எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வடகொரியா தூதுவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அணுவாயுத தயாரிப்பு மற்றும் சோதனை

Read Full Article
நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் 0

🕔11:32, 30.ஜன 2019

நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை 8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025ம் ஆண்டளவில் இந்த இலக்கை அடைய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரையான ஏற்றுமதியின் மூலம் ஆடை கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு 6 வீத வருமானம் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
சேனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து விசேட வைரஸ்

சேனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து விசேட வைரஸ் 0

🕔10:19, 30.ஜன 2019

சேனா படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென அமெரிக்காவிலிருந்து ஒருவகை விசேட வைரஸ் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாய துறைக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பூச்சியியல் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.எஸ்.வெலிகமகே தெரிவித்துள்ளார்.

Read Full Article
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது 0

🕔10:14, 30.ஜன 2019

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிண்ணியா – கண்டல்காடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கடற்படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த 12 கடற்படையினர் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

Read Full Article
மன்னார் புதைகுழி அகழ்வுப்ப பணிகள் மீண்டும் இன்று ஆரம்பம்

மன்னார் புதைகுழி அகழ்வுப்ப பணிகள் மீண்டும் இன்று ஆரம்பம் 0

🕔09:59, 30.ஜன 2019

மன்னார் புதைகுழி அகழ்வுப்ப பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சக்கங்கள் ஆய்விற்காக அமெரிக்காவின் புளோரிடா ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 21 ம் திகதி புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் அகழ்வுப் பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இதுவரையில் 300 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான மன்னார்

Read Full Article

Default