Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருள் சந்தேக நபர்களை விசாரணை செய்ய இலங்கை பொலிஸ் குழு பங்களாதேஷிற்கு பயணம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 16:09

போதைப்பொருள் சந்தேக நபர்களை விசாரணை செய்ய இலங்கை பொலிஸ் குழு பங்களாதேஷிற்கு பயணம்

இலங்கை பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷிற்கு செல்லவுள்ளது. அங்கு கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விசாரணை செய்ய குறித்த குழு செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் குழு அங்கு செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று முன்தினம் டாக்காவில் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேக நபர்களில் ஒரு பெண் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் பிரதான சந்தேக நபர் என தெரியவந்துள்ளது. அண்மையில் இரத்மலானை பகுதியில் கைப்பற்றப்பட்ட  போதைப்பொருள் கடத்தலுடன் குறித்த பெண்ணுக்கு தொடர்புள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு குறித்த பெண் வாடகை செலுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 16:09
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க