fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீலங்கா கடன் நிவாரணம் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 15:21

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீலங்கா கடன் நிவாரணம் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினூடாக கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கமொன்று நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வங்கிகளில் கடன் பெறும்போது ஏற்படும் பிரச்சினைகளையும் 1925 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.நிவாரண பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்த மற்றும் சுயதொழிலாளர்களை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை விவசாய தொழிற்துறைக்கென புதிய வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மரக்கறி ஏற்றிச்செல்லும் லொறிக்கெனவும் நிவாரண கடன் வழங்கப்படுமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 15:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க