fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமான முறையில் பணத்தை அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 15:11

சட்டவிரோதமான முறையில் பணத்தை அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

அங்கீகரிக்கப்பட்ட வசதிகள் மற்றும் சேவை கட்டணத்திற்கு மேலதிகமாக பணத்தை சட்டவிரோதமான முறையில் அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடரபில் கல்வியமைச்சின் செயலாளருக்கு, அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். வசதிகள் மற்றும் சேவை கட்டணத்தை அறவிடும்போது, தேசிய பாடசாலைகள், கல்வியமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறுவது அவசியமாகும். மாகாண பாடசாலைகள், மாகாண கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதியை பெறவேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சுற்றுநிரூபத்தை மீறி சில அதிபர்கள் பணம் அறவிடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுளது. அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1988 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தர முடியுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 15:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க