fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பும் தமது பொறுப்புக்களை தட்டிக்களிக்க முடியாது : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 14:48

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பும் தமது பொறுப்புக்களை தட்டிக்களிக்க முடியாது : ஜனாதிபதி

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் தற்போது எந்தவொரு தரப்பும் தட்டிக்களிக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. 8வது முறையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் 40 பாடசாலைகளை சேர்ந்த 93 மாணவர்கள் சுற்றாடல் தலைவர்களுக்கான பதக்கங்களை பெற்று கொண்டனர். பாடசாலை கல்வியின் ஊடாக சுற்றாடல் கல்வியை மாணவர்களுக்கு போதித்து அவர்களை சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபடச் செய்து சுற்றாடலை நேசிக்கும் பரம்பரையொன்றை கட்டியெழுப்புவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள நீல பசுமை யுகத்தின் மூலம் சிறந்த நாடு ஒன்றை கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த செயற்றிட்டத்தின் மூலம் நான்கு மில்லியன் பாடசாலை மாணவர்களை சுற்றாடல் பாதுகாப்பு பிரஜைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 வருட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு முன்னோடி ஜனாதிபதி பதக்கம் பெற்ற மாணவர் ஒருவருக்கு பல்கலைக்கழக பிரவேசத்தின் போது புறகிருத்திய செயற்பாடுகளுக்காக நான்கு புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. சுற்றாடல் தொடர்பான அறிவினை ஏட்டில் மட்டும் வரையறுக்காமல் சுற்றாடல் தொடர்பான அறிவின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்குவதற்கு இவ்வருடம் முதல் பாடசாலைகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க