fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 14:34

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. இருநாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்வுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் சீனா பொருட்களுக்கான வரியை அதிகரித்தமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பின் ஆகியோருக்கிடையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்போது பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இதனையடுத்து சீன உப பிரதமரின் தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு பயணித்தது. குறித்த குழு உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டது. இதன்போதே இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 14:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க