மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாவனெல்ல நீதவான் உபுல் ராஜகருணா இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவனெல்ல பகுதியிலுள்ள சில விகாரைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன. அதனுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாவனெல்ல பொலிஸாரால் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 11 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே, நீதவான் குறித்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.

மாவனெல்ல புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் : 11 பேருக்கு விளக்கமறியல்
படிக்க 0 நிமிடங்கள்