மலைநாட்டில் மரக்கறி செய்கைகளுக்கு சேனா படைப்புழுவினால் எவ்வித பாதிப்பும் இல்லையென விவசாய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பண்டாரவளை பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் குடம்பிகள் தொடர்பான பிரிவு மேற்கொண்ட ஆய்விற்கு அமையவே இவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சேனா படைப்புழுவில் குடம்பிகள் பதுளை , மொனராகலை மாவட்டங்களில் ஆய்வுகூடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதன்மூலம் இப்பகுதிகளில் மரக்கறி செய்கைக்கு சேனா படைப்புழுவினால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லையென உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் ஏனைய பீடைகளினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் சேனா படைப்புழுவினால் ஏற்பட்டுள்ளதாக பிழையாக உணரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் சோளச் செய்கைக்கு தாக்கம் செலுத்தியுள்ள சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு முடியுமென விவசாய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.