இலங்கை மற்றும் ஜேர்மனிகளுக்கிடையில் நீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் சட்டத்துறைகளில் காணப்படுகின்ற புரிந்துணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொபே அமைச்சர் தலதா அத்துகொரல்லவை சந்தித்த போதே இவ் இணக்கப்பாடு எட்டப்பட்டது. சட்ட மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் இச்சந்திப்பு இடம்பற்றது. இலங்கையில் நீதிமன்ற தொகுதிக்கும் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் ஜேர்மன் அரசாங்கம் வழங்குகின்ற பங்களிப்பு குறித்து அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் நீதிபதிகளுக்கும் நீதிமன்ற ஊழியர் படைக்கும் சட்டம் தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்வதற்காக ஜெர்மனியில் வழங்கப்பட்டுள்ள புரிந்துணர்வுகள் குறித்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையையும் சட்டத்தின் உறுதியையும் பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள செயற்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவிப்பதாக ஜேர்மன் தூதுவர் இச்சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் சட்ட புரிந்துணர்வுகளில் வளர்ச்சி
படிக்க 1 நிமிடங்கள்