சுகாதார சேவைக்கென மேலும் தாதியர்களை இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய ஆயிரத்து 608 பேருக்கு தாதியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. தாதியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதே இதன் நோக்கமாகும். இதேவேளை தற்போது தாதியர் பயிற்சி வித்தியாலயங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயிற்சிகளை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைக்கென மேலும் தாதியர்களை இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்
படிக்க 0 நிமிடங்கள்