நாட்டில் கலைத்துறையின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைகளை வழங்கிய கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் 34வது கலாபூசணம் அரச விருது விழா இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மாகாணஙக்ளையும் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இசை, நடனம், இலக்கியம், கற்புல கலைகள், நாடகம், புகைப்பட கலை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாட்டார் கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் சிறந்த சேவைகளை வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்
படிக்க 0 நிமிடங்கள்