fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2019 12:48

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் தீர்மானம்

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதிகளை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது வரைக்கும் இதனூடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவானோர் பிரதிபலனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அளவத்துவல தெரிவித்தார். முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு அந்த முச்சக்கரவண்டிக்கு பதிலாக காரொன்றை கொள்முதல் செய்வதற்கு குறைந்த வட்டியில் இரண்டு மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்படவுள்ளது. அதேபோல் பட்டதாரிகள் தங்களது வேலைத்திட்டம் தொடர்பில் திட்ட வரைபினை சமர்ப்பித்தால் அதன் சாதகத்தன்மையை ஆராய்ந்து எவ்வித வட்டியுமின்றி 15 இலட்சம் ரூபா கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் கோரப்படாது. விரைவாக இக்கடனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அளவத்துவல தெரிவித்தார். இதேவேளை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களை சக்திமிக்கதாக்குவதற்கான நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அளவத்துவல தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2019 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33