அரசியல்யாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் தவறான பிரச்சாரங்களை நிராகரிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் எந்தவொரு யோசனையும் அதில் உள்ளடக்கப்படவில்லையென பிரதமர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறை வர்த்தக கட்டிடத்தொகுதி மற்றும் பொது சந்தையை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பொது சந்தைக்கென 186 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. களுத்துறை புகையிரத வீதி வர்த்தக கட்டிடத்தொகுதிக்கென 2 ஆயிரத்து 288 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் 178 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத் நிதிவளத்தி ஊடாக அவை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்யாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் தவறான பிரச்சாரங்களை நிராகரிப்பதாக பிரதமர் தெரிவிப்பு
படிக்க 1 நிமிடங்கள்