இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியுள்ளது.கடந்த 24 ஆம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான போட்டி பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.இதன் படி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்;டுக்களையும் பறிகொடுத்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.நிரோசன் திக்வெல்ல 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் பெட் கமிண்ஸ் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.தனது முதலாவது இன்னிங்சில் ஆடிய ஆஸி அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 323 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ட்ரெவிஸ் ஹெட் 84 ஓட்டங்களை பெற்றார்.பந்துவீச்சில் சுரங்க லக்மால் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.பின்னர் தனது 2ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.பெட் கமிண்ஸ் 6 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.இதன்படி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களினால் ஆஸி அணி அபார வெற்றியை பெற்றது.போட்டி நாயகனாக பெட் கமிண்ஸ் தெரிவானார்.
அதன்படி 1-0 எனும் அடிப்படையில் ஆஸி அணி முன்னிலை வகிக்கின்றது.