fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றுள்ளார் ட்ரம்ப்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2019 15:05

தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றுள்ளார் ட்ரம்ப்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வரலாற்றிலேயே நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப்.

35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு பெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற உள்ள ஒப்பந்தத்தை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால்இ அவர் கோரி வந்த அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சுவர் எழுப்புவதற்கான எந்த நிதியும் இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படவில்லை.

தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய விடயமாக சுட்டிக்காட்டிய இந்த சுவர் கட்டுவதற்கான நிதியை  அளிக்காத எந்த ஒரு பட்ஜெட்டையும் நிராகரித்து வந்தார் டிரம்ப்.

ஆனால்இ அவரது எண்ணத்திற்கு ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவின் செனட் மற்றும் பிரதிநிகள் சபை இரண்டும் தற்காலிகமாக இந்த அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

bbc

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2019 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க