புதையல் தோண்டிய 4பேர் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிரிந்திவெல, குருதிய, ஹிஸ்வெல்ல பகுதியிலேயே இவ்வாறு அவர்கள் கைதாகினர்.
நேற்றைய தினம் கிடைக்பப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே அவர்கள் கைதாகினர்.குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல்’தோண்ட பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.30 மற்றும் 40 வயது மதிக்கத்தவர்களே கைதாகியுள்ளனர்.
இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.