fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழிலதிபரின் மகனை மணக்கும் ரஜினியின் இளைய மகள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 25, 2019 05:57

தொழிலதிபரின் மகனை மணக்கும் ரஜினியின் இளைய மகள்

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா வருகிற மாதம் மணமுடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் , நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியை திருமணம் திருமணம் செய்யவுள்ளாராம் . நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஸ்வின் – சவுந்தர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அதிகாரபூர்வமாக விவகாரத்தும் பெற்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர். தற்போது சவுந்தர்யா விசாகன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. “சவுந்தர்யா, விசாகன் திருமணம் வருகிற பிப்ரவரி  நடைபெற உள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 25, 2019 05:57

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க