fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கர்பமாகிய ஆண் தாதி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 25, 2019 05:47

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கர்பமாகிய ஆண் தாதி

அமெரிக்காவின் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. எனவே அந்த கோணத்தில் விசாரணையை தொடங்கினர். உண்மையை கண்டறிவதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அந்த மருத்துவமனையில் ஆண் தாதியாக பணியாற்றும் ஊழியர் ஒருவர், கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கினார் என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 25, 2019 05:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க