fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடைசெய்யப்பட்ட பாலியல் ஒளடதங்களுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:35

தடைசெய்யப்பட்ட பாலியல் ஒளடதங்களுடன் ஒருவர் கைது

தடைசெய்யப்பட்ட பாலியல் தொடர்பான ஒளடதங்கள் மற்றும் உணவில் பூசும் பூச்சுக்கள் சிலவற்றை எடுத்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் யு.எல். 318 எனும் இலக்கம் கொண்ட விமானத்தில் வருகை தந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் 62 வயதான வர்த்தகர் எனவும் இவர் கம்பஹா உடுகம்பொலவை சேர்ந்தவர் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை இதே விமானத்தில் பெங்கோக் நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பயணியொருவர் தமது பயணப் பொதியில் 168 லைவ் பேர்ட்ஸ்களை எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநகர் மாரவில பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்த பட்சிகளின் பெறுமதி எட்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமானது என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய கூடுகளில் அடைத்து இவற்றை அவர் எடுத்து வந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து உயிரினங்களை இலங்கைக்கு எடுத்து வரும் போது உரிய அனுமதியை பெற்று கொள்ள வேண்டுமெனவும் அதற்கான எந்த ஆவணமும் இவரிடம் இருக்கவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க