fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலநிலை அறிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:31

காலநிலை அறிக்கை

எதிர்வரும் சில நாட்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் காலையிலும் இரவிலும் குளிரான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் ஓரளவு தூரல் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற நிலை காணப்படும் எனவும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் கடும் காற்று அடை மழை, கடல் கொந்தளிப்பை எதிர் பார்க்கலாம் எனவும் காற்றின் வேகம் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவித்துள்ள காலநிலை அவதான நிலையம், ஏனைய கடல் பகுதிகளில் காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவித்துள்ளது. மன்னார் முதல் மாத்தறை வரையான கடல் பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் ஏனைய பகுதிகளில் காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுமென தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதியில் கடும் காற்று வீசுமெனவும் மீனவர்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க