fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசியல் துறையில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தினை நாம் ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் பாட்டலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:12

அரசியல் துறையில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தினை நாம் ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் பாட்டலி

திறமையை அங்கீகரிக்க கூடிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மெகா மைன்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நமது அரசியல் துறையில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தினை நாம் ஏற்படுத்த வேண்டும். திறமைக்கு மதிப்பளிக்கும் அரசியல் பின்புலம் ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான ஒரு நிலையை நாம் ஏற்படுத்தினால் எமது அரசியலில் சிறந்த மாற்றங்கள் உருவாகும். உலகில் உள்ள சிங்கபூர், கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் திறமைக்கு மதிப்பளித்தமையினாலேயே எமது நாட்டினை விட முன்னிலையில் உள்ளன. இவ்வாறு திறமைக்கு மதிப்பளிக்காவிட்டால் நமது நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க