fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றப்பட்டது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:02

சட்டவிரோத மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோத முதிரை மற்றும் தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றை மட்டக்களப்பு புல்லுமலை வன ஜீவராசிகள் அலுவல்கள் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மகா ஓயா செங்கலடி பிரதான வீதியில் லொறியொன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற போது இழுப்படிச்சேனையில் வைத்து அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். இதன்போது அனுமதி பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றமை தெரியவந்துள்ளது. அதிலிருந்து 23 தேக்கு மற்றும் முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த லொறியின் சாரதி ஏராவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமையை தொடர்ந்து அவரை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் பிரதிவாதிகள் தரப்பினால் தாக்கல் செய்ய்பபட்ட பிணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு லொறியும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சந்தேகநபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வட்டார வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி நடேசன் தலைமையிலான குழுவினரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க