fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலையக தோட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிக சேவை செய்ய முடியும்-இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 13:57

மலையக தோட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிக சேவை செய்ய முடியும்-இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் மலையக தோட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிக சேவை செய்ய முடியும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பஸறை லுனுகல எல்ரோட் தோட்ட பாதை கொன்கிறீட் பாதையாக மாற்றப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பாதையை திறந்து வைத்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தமது அமைச்சின் மூலம் மலையக மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்ற முடியும் எனவும் பிரதமரும் இதே எண்ணத்திலேயே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 13:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க