fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சேனா படைப்புழுவினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2019 14:12

சேனா படைப்புழுவினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

சேனா படைப்புழுவின் தாக்கத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று விவசாய அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒரு ஹெக்டெயருக்கு 40 ஆயிரம் ரூபா உயர்ந்தபட்ச இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இயற்கை அனர்த்தங்களினால் சேதமடையும் என்று இனங்காணப்பட்டுள்ள ஏழு பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதை போன்று, சேனா படைப்புழுவினால் முழுமையான பயிர்ச் சேதம் ஏற்படுமாயின், அதற்கான இழப்பீட்டை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இலங்கையின் விவசாயத் துறையுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களையும் அழைத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி வாராந்த அறிக்கை சமர்ப்பிக்குhமறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சரவை கூட்டத்தில் பணிப்புரை வழங்கினார். இதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கவும் நிதி அமைச்சு தயார் நிலையில் உள்ளது என்றும் விவசாய அமைச்சர் பி.ஹரிஸன் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2019 14:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க