கைவினை கைத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ‘ஜனாதிபதி விருது’ வழங்கி கௌரவிக்கப்படுவார்களென கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மட்டத்தில் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் கைவினை பொருட்களை உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதே முதற்கட்ட நோக்காகும். இதனூடாக கைவினை தொழிற்துறை அபிவிருத்திக்கு தேவையான பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கைவினை கைத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்