சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளில் சூரியசக்தி குடிநீர் வழங்கும் திட்டங்களை ஆரம்பிக்க ஜப்பான் சர்வதேச மேம்பாட்டு நிதியம் முன்வந்துள்ளது. திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நகரதிட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் அலுவலக செயலாளர் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராய்வு
படிக்க 0 நிமிடங்கள்